1

என்னுரை

பழங்காலத்தில் தோன்றிய பல தத்துவங்கள் மன்னர்களைப் பாதுகாப்பதாகவும், ஆளும் வர்க்கத்தைப் பாதுகாப்பதாக உள்ளன.சிலருடைய தத்துவங்கள் மக்களை எழுச்சி அடையும்படி செய்தன.அக்காலப் பழக்கத்தில் இருந்த மூடநம்பிக்கைக்கு எதிராக இளைஞர்களை சிந்திக்கத் தூண்டிய சாக்ரடீஸிற்கு விஷம் கொடுத்து கொலை செய்தனர். மாற்ற வேண்டும், மக்கள் நலமாக வாழ வேண்டும் என்பதற்காக பல தலைவர்கள் தங்கள் வாழ்நாளை மக்களுக்காக வாழ்ந்தனர்.தங்கள் நாட்டின் சுதந்திரத்திற்காகவும், தொழிலாளி வர்கத்திற்காகவும் பாடுபட்டவர்கள் ஏராளம்.அதுதவிர உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் தங்கள் உரிமைகளைப் பெற்று நலமாக வாழ வேண்டும் எனப் போராடிய , புரட்சி செய்த தலைவர்களும் உள்ளனர்.சமூகத்தை மாற்ற போராடிய தலைவர்களை சமூக விஞ்ஞானிகள் என்று அழைக்கலாம். இப்படி சமூக மாற்றத்திற்காக பாடுபட்ட பல தலைவர்களின் வாழ்க்கையோடு அவர்கள் சமூகத்திற்கு விட்டுச் சென்ற பிரபலமான வாசகங்களை அடிப்படையாகக் கொண்டு இப்புத்தகத்தை எழுதியுள்ளேன்.மாணவர்கள் மத்தியில் இப்புத்தகம் நல்ல சிந்தனைகளை வளர்க்கும் என்று நம்புகிறேன்.

இப்புத்தகத்தை எழுதுவதற்கு எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த என் மனைவி திருமிகு..தில்லைக்கரசி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தப் புத்தகத்தைச் செழுமைப்படுத்திக் கொடுத்த ஓய்வுபெற்ற ஆசிரியர் திருமிகு.செ.நமசிவாயம் அவர்களுக்கும்,தட்டச்சு செய்துகொடுத்த திருமிகு.பெ.சாம்சுரேஷ் அவர்களுக்கும் எனது நன்றி.இந்தப் புத்தகத்தை மின்னூலாக வெளியிட்ட Freetamilebooks.Com குழுவினருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்த்துகளுடன்,

ஏற்காடு இளங்கோ

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சமூக அறிஞர்களின் வாசகங்கள் Copyright © 2015 by ஏற்காடு இளங்கோ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book