35

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல.

தடைகளை வெற்றிகொண்டு வாழும் வாழ்க்கை.

கண்கள் தெரியாது,காது கேளாது, வாய் பேச முடியாது என மூன்று குறைபாடுகளுடைய ஒருவர் உலகளவில் பிரபலம் அடைந்தார் என்றால் அது ஹெலன் கெல்லர் (Helen Kellar ) என்னும் பெண்மணியைச் சேரும்.உலகில் பட்டப்படிப்பை முடித்த முதல் பார்வையற்றவர் ஹெலன் கெல்லர் ஆவார். இவர் 1880 ஆம் ஆண்டு ஜூன் 27 அன்று அமெரிக்காவில் உள்ள டாஸ்காம்பியா என்னும் ஊரில் பிறந்தார்.19 மாதக் குழந்தையாக இருக்கும்போது பேசும் தன்மையையும், கேட்கும் தன்மையையும், பார்க்கும் தன்மையையும் இழந்தார்.ஆணி சல்விவன் என்கிற ஆசிரியையின் உதவியால் படிக்கக் கற்றுக்கொண்டார்.பிறர் பேசும் பொழுது அவர் உதடுகளில் கை வைத்து அதிர்வுகள் மூலம் பேசுவதைப் புரிந்துகொண்டார்.தொடுதல் புரிதல் வகையில் ஹெலனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தார்.அடுத்தவர் பேசுவதை தொடுதல் முறையில் புரிந்துகொள்வதை ஆணி கற்றுக்கொடுத்தார்.

அடுத்தவர் பேசும்மொழி என்ன என்பதை தொண்டைக்குழியில் கையை வைத்தே கண்டுபிடித்தார்.அவர் தனது பட்டப்படிப்பை 24 வயதில் முடித்தார்.ஹெலன் பொதுவுடைமைவாதியாக மாறினார்.பெண்களுக்காகவும் தொழிலாளர்களுக்காகவும் போராடினார்.அவர் சோசலிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்.அரசியலிலும் ஈடுபட்டார்.அவர் 12 புத்தகங்களை எழுதினார்.என் கதை என்கிற புத்தகம் உலகப் புகழ்பெற்றது.அவர் பேசக் கற்றுக்கொண்டு ,உலகம் முழுவதும் சென்று சொற்பொழிவு ஆற்றினார்.சமூக சேவையிலும் ஈடுபட்டார்.விடாமுயற்சியாலும் ,தன்னம்பிக்கையாலும் ஒருவர் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய ஹெலன் கெல்லர் 1968 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சமூக அறிஞர்களின் வாசகங்கள் Copyright © 2015 by ஏற்காடு இளங்கோ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book