6

ஒரு தேசம் சிந்திக்கத் தொடங்கிவிட்டால்,

அதை எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது.

உலக வரலாற்றில் நடந்த பிரெஞ்சுப் புரட்சியை மக்கள் யாரும் மறந்து விட முடியாது. அது நிலப்பிரபுத்துவத்திற்கு முடிவு கட்டியது.இதனால் உலகில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது.சுதந்திரம்! சமத்துவம்! சகோதரத்துவம்! என்ற புதிய முழக்கம் புரட்சி முழக்கமாக ஒலித்தது.இந்த பிரெஞ்சுப் புரட்சிக்கு தூண்டுகோலாக எழுதிய மிகப் பெரிய சமூக எழுத்தாளர் வால்டேர் (Voltair) ஆவார்.இவர் பழமையை உடைத்தார்.இவர் வாழ்ந்த 18 ஆம் நூற்றாண்டை வால்டேரின் யுகம் என்று வரலாறு கூறுகிறது.இவர் பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் 1694 ஆம் ஆண்டு நவம்பர் 21 அன்று பிறந்தார்.இவரின் பெயர் பிரான்சுவாமாரீ அரூவே என்பதாகும்.இவரின் புனைபெயர்தான் வால்டேர்.இவர் நாடகம், கவிதை, புதினம், கட்டுரை, வரலாறு, அறிவியல் என பலதுறைகளில் எழுதினார்.

கடுமையான விதிகளும், தண்டனைகளும் விதிக்கப்பட்டபோதும் வெளிப்படையாகப் பேசும் சீர்திருத்தவாதியாக இருந்தார். பிரான்சு மக்களுக்கு கல்வி புகட்டுவதற்காக 24 தொகுதிகள் கொண்ட நூல்களை எழுதினார். மதகுருமார்கள் மற்றும் மூடநம்பிக்கைக்கு எதிராகவும் விமர்சனம் செய்து வந்தார்.அவர் 1778 ஆம் ஆண்டு மே 30 இல் இயற்கை எய்தினார்.சீன் நதிக்கரையில் அடக்கம் செய்யப்பட்டார். 13 ஆண்டுகளுக்குப் பிறகு கல்லறை திறக்கப்பட்டு அவரது எலும்புகள் அடங்கிய பெட்டி பாரீஸில் புதைக்கப்பட்டது.இந்த இடத்தில்தான் சர்வதிகாரம் உங்களைச் சங்கிலியால் பிணைத்தது.இன்று அதே இடத்தில் மக்கள் உங்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறார்கள் என்ற வரிகள் பொறிக்கப்படிருந்தன.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சமூக அறிஞர்களின் வாசகங்கள் Copyright © 2015 by ஏற்காடு இளங்கோ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book