14

தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே.

தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது

நிறைய இருக்கிறது.

உலகத் தலைவர்களில் தேசிய விடுதலை இயக்கங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்களில் முதன்மையானவர் லெனின் (Lenin ) ஆவார்.இவர் 1870 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று ரஷ்யாவின் வால்கா நதிக்கரை ஓரம் உள்ள சிம்பிர்ஸக் என்னும் நகரத்தில் பிறந்தார்.இவரின் பெயர் விளாடிமிர் இலீச் உல்யானவ். லெனின் என்பது ரஷ்யப் புரட்சிக்காக அவர் கொண்டிருந்த புனைபெயர்.பின்னர் விளாடிமிர் லெனின் எனத் தனது பெயரை மாற்றிக் கொண்டார்.கார்ல் மார்க்ஸின் மூலதனம் என்னும் புத்தகத்தைப் படித்த பிறகு தொழிலாளர்களுக்காக பாடுபட வேண்டும் என முடிவு செய்தார்.

ரஷ்யப் புரட்சிக்கு தலைமை தாங்கி கம்யூனிஸ்ட் ஆட்சியை 1917 ஆம் ஆண்டில் கொண்டுவந்தார்.கார்ல் மார்க்ஸின் சித்தாந்தத்தை வரலாற்றில் முதன்முதலில் செயல்படுத்தினார்.சோவியத் ரஷ்யாவின் முதல் அதிபராக லெனின் பதவி வகித்தார்.ஆட்சி அமைத்த மறுநாளே நிலபிரபுக்களின் விளைநிலங்களைக் கைப்பற்றி விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுத்தார்.ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி வந்த பிறகு உலகம் முழுவதும் கம்யூனிசம் பரவியது.லெனின் நிறைய படித்தார்.புரட்சிகரமான கருத்துகளை புத்தகமாக எழுதினார்.அவை 55 தொகுதிகளாக வெளிவந்தன.இவர் 1924 ஆம் ஆண்டு ஜனவரி 21 அன்று காலமானார்.அவரது பதப்படுத்தப்பட்ட உடல் மாஸ்கோ செஞ்சதுக்கத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

17

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சமூக அறிஞர்களின் வாசகங்கள் Copyright © 2015 by ஏற்காடு இளங்கோ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book