25

எல்லோரும் உலகத்தை மாற்ற வேண்டும்

என்று எண்ணுகிறார்களே தவிர ஒருவரும்

தன்னை எப்படி மாற்றிக்கொள்ள வேண்டும்

என்று எண்ணுவதில்லை.

உலகின் மிகச் சிறந்த நாவலாசிரியர் லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) ஆவார்.இவர் ஒரு ரஷ்ய எழுத்தாளர். புதின எழுத்தாளர்களில் மிகச் சிறந்த ஒருவராகக் கருதப்படுகிறார். மிகத் தெளிவான சிந்தனையாளராக விளங்கினார்.இவர் 1828 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 அன்று யாஸ்னயா என்னுமிடத்தில் ஒரு பிரபுத்துவ குடும்பத்தில் பிறந்தார்.ஆரம்பத்தில் சிறு கதைகளை மட்டுமே எழுதிவந்தார். பிற்காலத்தில் நாடகங்களையும்,கட்டுரைகளையும் எழுதினார்.இவரின் சிறந்த நாவல்களாக போரும் அமைதியும் (War and Peace) மற்றும் அன்னா கரேனினா கருதப்படுகின்றன. இது மிகச் சிறந்த சாதனையாகக் கருதப்படுகிறது.இவை 19 ஆம் நூற்றாண்டின் ரஷிய வாழ்க்கையை சித்தரிக்கிறது.இவை எல்லாக் காலத்திலும் போற்றப்படக்கூடிய நாவல்களாக விளங்குகின்றன.

லியோ டால்ஸ்டாய் ஓர் அமைதி விரும்பி,சமூக சீர்திருத்தவாதி.ஒருவர் ஒருவரை மன்னிப்போம்,அப்போதுதான் அமைதியாக வாழமுடியும் என்றார்.இவர் கல்விச் சீர்திருத்தவாதியாகவும் இருந்தார்.தான் கற்றறிந்த, கேட்டறிந்த வாழ்க்கை நெறிகளை தன் வாழ்நாளில் பின்பற்ற முயன்றார்.டால்ஸ்டாய் நிமோனியாக் காய்ச்சலால் 1910 ஆம் ஆண்டு நவம்பர் 20 அன்று அஸ்தபோவ் என்னும் சின்னஞ்சிறிய ரயில் நிலையத்தில் இறந்தார்.இறுதிச் சடங்கில் மக்கள் வெள்ளமாகத் திரண்டனர்.இறுதி ஊர்வலத்தைப் பார்த்தவர்கள் ஒரு பெருமகன் இறந்துள்ளார் என்று போற்றியுள்ளனர்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சமூக அறிஞர்களின் வாசகங்கள் Copyright © 2015 by ஏற்காடு இளங்கோ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book