39

Each person must like their

life as a model for others.

பெண் உலகின் கறுப்பின காந்தி என அழைக்கப்படுபவர் ரோசா பார்க்ஸ் (Rosa Parks) ஆவார்.இவர் நவீன குடியுரிமை இயக்கத்தின் தாய் என ஐக்கிய அமெரிக்க காங்கிரசால் அழைக்கப்படுகிறார்.இவர் 1913 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் நாள் அமெரிக்காவின் மாநிலமான அலபாமாவில் டஸ்கிகீ என்னும் நகரில் பிறந்தார்.இவர் கலப்பு இனத்தவர். அக்காலத்தில் நிறவெறி தலைவிரித்தாடியது. கறுப்பர்கள் குறைவாகவே கல்வி கற்றிருந்தனர். பேருந்துகளில் முதல் நான்கு வரிசை வெள்ளையர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. கறுப்பர்களுக்கு பின் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. வெள்ளையர்கள் இல்லை என்றாலும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமரக்கூடாது. ஒரு முறை ரோசா பார்க்ஸ் அமர்ந்தபோது ஓட்டுனரால் இறக்கி விடப்பட்டார்.

ஒரு முறை ரோசா பார்க்ஸ் பஸ்ஸில் பயணித்தபோது வெள்ளையர்கள் அதிகம் ஏறியதால் பின் வரிசைக்கு நகருமாறு நடத்துனர் கூறினார்.எழுந்திரிக்க மறுத்ததால் சட்ட விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.இதனை எதிர்த்துப் போராடியபோது 40000 கறுப்பின மக்கள் பேருந்தில் செல்லுவதை புறக்கணித்தனர்.இவர் வேலை செய்த இடத்திலிருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டார்.பலர் வேலை கொடுக்க மறுத்தனர்.இவரின் போராட்டத்தால் பஸ்ஸில் கறுப்பின மக்களும் சமமாக உட்கார உரிமை கிடைத்தது.இவர் 2005 ஆம் ஆண்டில் இறந்தபோது இவரின் நகரிலிருந்து சென்ற பேருந்துகளில் முன்வரிசைகளில் கருப்புநிற ரிப்பன்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சமூக அறிஞர்களின் வாசகங்கள் Copyright © 2015 by ஏற்காடு இளங்கோ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book