30

ஒரு மனிதனின் உண்மையான தன்மையை

அறிய வேண்டுமானால்,அவனுக்கு

அதிகாரத்தைக் கொடுத்துப் பாருங்கள்.

அமெரிக்காவின் பகுத்தறிவு மேதை என அழைக்கப்படுபவர் ராபர்ட் கிரீன் இங்கர்சால் (Robert G. Ingersoll) ஆவார்.இவர் 1833 ஆம் ஆண்டு ஆகஸ்டு 11 அன்று நியூயார்க் மாகாணத்தில் உள்ள டிரத்தன் என்ற ஊரில் பிறந்தார்.சிறு வயதிலேயே சிந்தனைதிறன் கொண்டவராக இருந்தார்.ஆரம்பத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். மதப் போதகர்கள் இவரிடம் ஞானஸ்நானம் பற்றி கருத்து கேட்ட போது ,ஞானஸ்நானத்தை விட சோப்புக் குளியல் நல்லது என்றார்.அதனால் இவர் ஆசிரியர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.பின்னர் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார்.தனது அறிவாலும்,திறமையாலும் இல்லியான்சு மாநில அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.

இவரின் கொள்கைப்பிடிப்பு, நேர்மையின் காரணமாக இல்லியான்சு மாகாணத்தின் ஆளுநர் வாய்ப்பு கிடைத்தது.மதம் சார்ந்த விமர்சனங்களை திரும்பப் பெற்றால் ஆளுநர் பதவிக்கு பரிந்துரைப்பதாகக் கூறினார்கள்.இங்கர்சால் மதம் சார்ந்த விமர்சனங்களைத் திரும்பப் பெற மறுத்ததால் ஆளுநர் பதவி கிடைக்காமல் போனது ,மக்கள் துயரமடைவதற்கும்,நாட்டில் பல அநீதிகள் நிகழ்வதற்கும் மதங்களே காரணம் என்றார்.கிறிஸ்துவ மதத்தின் மூடநம்பிக்கையை எதிர்த்து 40 ஆண்டுகள் தீவிர எதிர்ப்புகளுக்கிடையே பிரச்சாரம் செய்தார்.இவர் 1899 ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சமூக அறிஞர்களின் வாசகங்கள் Copyright © 2015 by ஏற்காடு இளங்கோ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book