22

மனிதன் என்பவன் ஓரே இடத்தில்நிற்கும் மரமல்ல.

உணர்ச்சிப் பிழம்பான ஓர் அசையும் பிராணி.

இயக்கிக் கொண்டே இருக்க வேண்டியது மனிதன் கடமை,

இயங்க மறுப்பவன் மனிதன் அல்ல.

இந்திப் பயண இலக்கியத்தின் தந்தை என ராகுல் சாங்கிருத்தியாயன் (Rahul Sankrityayan) அழைக்கப்படுகிறார். இவர் பல மொழி கற்ற பல்துறை வித்தகர், மார்க்சியவாதி.அதுமட்டும் அல்லாமல் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக எழுதிய காரணத்தால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார். இவர் 1893 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார்.ஆரம்பக் கல்வி மட்டுமே பயின்றார்.ஆனால் தாமாகவே தமிழ், இந்தி, பாலி, சமஸ்கிருதம், அரபி, உருது, பாரசீகம், கன்னடம், சிங்களம், பிரெஞ்சு, ரஷ்யா மொழி என பல மொழிகளைக் கற்றார்.அத்துடன் புகைப்படக் கலையையும் கற்றார்.இவர் நேபாளம்,தீபெத்,இலங்கை,ஈரான்,சீனா,ரஷியா என வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர். தனது வாழ்நாளில் 45 ஆண்டு காலம் உள்நாடு,வெளிநாடுகள் பயணத்தில் செலவழித்தார்.

ராகுல்ஜி 146 புத்தகங்களை எழுதியுள்ளார்.வால்கா முதல் கங்கை வரை என்ற வரலாற்றுப் புனைவு நூல் மிகவும் பிரபலமானது.கி.மு.6000 முதல் கி.பி 1942 இல் முடியும் வரலாறாக இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது.பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.இவர் சாகித்திய அகாடமி விருதினையும்,பத்மபூஷன் விருதையும் பெற்றுள்ளார்.முறையான கல்வி கற்காதவர் என்றாலும் இவரின் அறிவுத் திறமையைக் கருதி சோவியத் யூனியன் இவரை லெனின்கிராட் பல்கலைக்கழகத்தின் இந்திய பேராசிரியர் பதவி கொடுத்தது.இவர் 1963 ஆம் ஆண்டு காலமானார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சமூக அறிஞர்களின் வாசகங்கள் Copyright © 2015 by ஏற்காடு இளங்கோ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book