5

My life not availeth me

in comparison to the

liberty of the truth.

கடவுள் மனிதனிடம் நேரடியாகப் பேசுகிறார்,மதக்குருக்கள் தேவை இல்லை என்ற கூற்றை ஆதரித்து அதற்காக பல போராட்டங்களை நடத்திய பெண் மேரி பாரட் டயர் (Mary Barrett Dyer) ஆவார். இவர் ஓர் ஆங்கில சீர்திருத்த திருச்சபைவாதியாகவும், மதச்சுதந்திர போராளியாகவும் விளங்கினார். இவர் 1611 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் பகுதியில் உள்ள பாஸ்டன் நகரில் பிறந்தார்.இவர் வில்லியம் டயர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இறைவனிடம் தொடர்புகொள்ள பைபிள் படித்தால் போதும்.அதற்கு இடைத்தரகர் போல பாதிரியார்கள் தேவை இல்லை என்று வலியுறுத்தி வந்தார்.இவருக்கு ஊனமுற்ற குழந்தை இறந்து பிறந்தது. அதனை தானே தனிப்பட்ட முறையில் புதைத்தார்.இது திருச்சபைக்கு எதிரானது எனக் கூறி காலனி ஆட்சிப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இவர் இருமுறை நாடு கடத்தப்பட்டார்.மீண்டும் மாசாசூ செட்ஸ் திரும்பி வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கைது செய்யப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்வதாக கூறியும் ,மன்னிப்பு கேட்க மறுத்து விட்டார்.1660 ஆம் ஆண்டு ஜூன் 1 அன்று பொதுமக்கள் முன்னிலையில் பாஸ்டன் பொதுப்பூங்காவில் மேரி டயர் தூக்கிலிடப்பட்டார்.பால்டன் தியாகிகள் எனக் குறிப்பிடப்படும் தூக்கிலிடப்பட்ட நால்வரில் ஒருவர் மேரி டயர் ஆவார்.இவருடைய மரணம் குவேக்கர்களுக்கு எதிரான சட்டங்களை தளர்த்த பிற்காலத்தில் உதவியது

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சமூக அறிஞர்களின் வாசகங்கள் Copyright © 2015 by ஏற்காடு இளங்கோ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book