31

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை.

முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய

அவசியமில்லை முதல் படியில் ஏறு.

அமெரிக்காவில் கருப்பான மக்களின் சமூக உரிமைக்காகப் போராடிய மாபெரும் ஆப்பிரிக்கஅமெரிக்க தலைவர் மார்டின் லூதர் கிங் ஜூனியர் (Martin Luther King ,Jr.) ஆவார்.இவர் அமெரிக்காவில் 1929 ஆம் ஆண்டு ஜனவரி 15 அன்று பிறந்தார்.இவருடைய பெயர் மைக்கேல் கிங் ஆகும்.அப்போது ஜெர்மனியில் புகழ்பெற்றிருந்த சீர்திருத்தவாதி மார்டின் லூதர் என்பவருடைய பெயரை இவருடையதாக மாற்றிக் கொண்டார்.இவர் பாதிரியாராகப் பணிபுரிந்தார். அமெரிக்காவில் வெள்ளையர்களின் நிறவெறியால் கருப்பு மனிதர்களை அடிமைப்படுத்திவந்தனர். காந்தியின் அறப் போராட்ட வழியில் பல போராட்டங்களை நடத்தினார்.இதனால் இவரை கருப்பு காந்தி என்றும் அழைத்தனர்.

இவர் 1962 ஆம் ஆண்டில் வேலையும், சுதந்திரமும் வேண்டி மிகப் பெரிய பேரணியை நடத்தினார். இவரின் போராட்டங்களின் பலனாக கருப்பான மக்களுக்கு ஓட்டுரிமை கிடைத்தது. கருப்பினத்தவர்களும், வெள்ளையினத்தவர்களும் சமம் என்னும் மனித உரிமைச் சட்டம் அமெரிக்காவில் நிறைவேறியது.வன்முறையற்ற வகையில் நிறவெறிக்கு எதிராக பாடுபட்டதற்காக 1964 ஆம் ஆண்டில் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.1968 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் நாள் டென்னசி என்னும் இடத்தில் சொற்பொழிவு ஆற்றச் சென்றார்.அவர் விடுதியில் தங்கியிருக்கும் போது வெள்ளையினத் தீவிரவாதியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சமூக அறிஞர்களின் வாசகங்கள் Copyright © 2015 by ஏற்காடு இளங்கோ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book