41

ஒரு குழந்தை ,ஒரு ஆசிரியர்,ஒரு புத்தகம்

ஒரு எழுதுகோல், இவை போதும்

இந்த உலகத்தை முழுமையாக மாற்ற.

மிகக் குறைந்த வயதில் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற கல்வி உரிமைப் போராளி மலாலா யூசஃப்சாய் (Malala Youzafzai) ஆவார்.2014 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு மலாலா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தி ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டது.மலாலா பாகிஸ்தான் நாட்டின் ஸ்வாத் பள்ளத்தாக்கில் உள்ள மிங்கோரா என்னும் சிற்றூரில் 1997 ஆம் ஆண்டு ஜூலை 12 அன்று பிறந்தார்.இப்பகுதி தலிபான் என்னும் மததீவிரவாதிகளின் பிடியில் 2007 ஆம் ஆண்டு முதல் சிக்கித் தவிக்கிறது.பெண்கள் பொது இடங்களில் நின்று பேசக் கூடாது.பெண்கள் பள்ளிக்குச் செல்லக் கூடாது என தடை விதித்தார்கள். அல்லா ஒரு போதும் பெண்களை படிக்காமல் இருக்கச் சொல்லவில்லை என வாதிட்டதோடு, மலாலா பள்ளிக்குச் சென்றார்.பல பெண் குழந்தைகளையும் பள்ளிக்கு அழைத்துச் சென்றார்.

மலாலா 2012 ஆம் ஆண்டு அக்டோபர் 9 அன்று தீவிரவாதியால் சுடப்பட்டார்.உயிருக்கு போராடிய மலாலா இங்கிலாந்திலுள்ள பர்மிங்ஹாமின் எலிசபெத் மருத்துவமனையில் காப்பாற்றப்பட்டார்.லண்டனில் படித்துக் கொண்டே பாகிஸ்தானில் உள்ள சிறுமிகள் பள்ளியில் சென்று படிக்க வேண்டும் என்றார்.படிக்காமல் பெண்கள் இருக்கக் கூடாது என பிரச்சாரம் செய்தார்.அத்துடன் உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என .நா சபையில் பேசினார்.மலாலா பிறந்த ஜூலை 12 ஆம் தேதியை மலாலா தினமாக .நா சபை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சமூக அறிஞர்களின் வாசகங்கள் Copyright © 2015 by ஏற்காடு இளங்கோ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book