18

மதம் மனிதனை மிருகமாக்கும்.

சாதி மனிதனை சாக்கடையாக்கும்.

ஈரோடு வெங்கடசாமி இராமசாமி என்பவர் 1874 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று தமிழ்நாட்டில் ஈரோடு என்னும் ஊரில் பிறந்தார்.சமூக சீர் திருத்தவாதியாகவும், சாதி வேற்றுமைகளை அகற்றுவதற்காகவும்,மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும்,பெண் சமத்துவத்திற்காகவும் போராடிய ஒரு நாத்திகர். தமிழகத்தில் திராவிட இயக்கத்தைத் தோற்றுவித்தவர்.தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளைப் பேசும் ஆற்றல் பெற்றவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும்,பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. ரஷ்யாவின் பொதுவுடமைக் கொள்கையும்,இவருடையக் கொள்கையும் ஒத்ததாகவே இருந்தது.

1936 ஆம் ஆண்டு நவம்பர் 13 அன்று சென்னையில் நடந்த தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் இவருக்குப் பெரியார் என்ற பட்டம் வழங்கப்பட்டது.இவர் தன்னுடைய பெயருக்குப் பின்னால் வரும் சாதிப் பெயரை நீக்க முன்னுதாரணமாக விளங்கினார்.தமிழகத்தில் பகுத்தறிவையும் ,முற்போக்கு சிந்தனையையும் வளர்த்த மாபெரும் மனிதர்.இவரின் சமுதாயப் பணியைப் பாராட்டி யுனெஸ்கோ நிறுவனம் தென்னிந்தியாவின் சாக்ரடீஸ்;சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி எனப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சமூக அறிஞர்களின் வாசகங்கள் Copyright © 2015 by ஏற்காடு இளங்கோ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book