24

இறந்த பிறகும் நீங்கள் மறக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால்; ஒன்று சிறந்த படைப்புகளை

எழுதுங்கள், அல்லது பிறர் உங்களைப் பற்றி எழுதும்

அளவுக்கு ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழுங்கள்.

ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கிய மூத்த தலைவர்களில் ஒருவர் பெஞ்சமின் பிராங்கிளின் (Benjamin Franklin) ஆவார்.அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தைத் தயார் செய்து கையெழுத்திட்ட மூவரில் ஒருவர்.அமெரிக்காவின் அரசியல் சட்டத்தை இயற்றிய குழுவில் முக்கியமானவர்.இவரது மேற்பார்வையில் உருவான அரசியல் சட்டம்தான் இன்றும் அமெரிக்காவை வழிநடத்துகிறது.பெஞ்சமின் பிராங்க்ளின் 1706 ஆம் ஆண்டு ஜனவரி 17 அன்று அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பிறந்தார். ஓராண்டு மட்டுமே பள்ளிப்படிப்பை படித்தார்.ஆனால் நூல்களை வாசிப்பதில் அதிகம் ஈடுபாடு கொண்டிருந்தார்.அச்சுக்கூடத்தில் வேலை செய்தபோது அச்சுக்கு வரும் புத்தகங்கள் அனைத்தையும் படித்தார்.பிறகு ஒரு அச்சு நிறுவனத்தை தொடங்கியதோடு,நிறைய இதழ்களில் எழுதியதால் அவர் அமெரிக்கா முழுவதும் பிரபலம் அடைந்தார்.

பெஞ்சமின் ஆய்வுகளிலும் ஈடுபட்டார்.மின்சாரத்தின்மீது ஆய்வுகள் செய்தார்.மின்னல் இடியிலிருந்து கட்டிடங்களைப் பாதுகாக்கும் இடிதாங்கிகளைக் கண்டுபிடித்தார்.முதியவர்களின் எட்டப்பார்வை, கிட்டப்பார்வைக்கும் சேர்த்து ஒரே கண்ணாடியான வெள்ளெழுத்துக் கண்ணாடியை இவரே முதலில் கண்டுபிடித்தார்.இவர் ஒரு விஞ்ஞானி ,எழுத்தாளர் மற்றும் ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும் விளங்கினார்.சுதந்திரம் அடைந்த பிறகு அமெரிக்கா வெளியிட்ட இரண்டு அஞ்சல் தலைகள் ஒன்றில் இவரின் படம் இடம் பெற்றிருந்தது.இவர் 1790 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 அன்று இயற்கை எய்தினார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சமூக அறிஞர்களின் வாசகங்கள் Copyright © 2015 by ஏற்காடு இளங்கோ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book