33

வெற்றி என்பது இலட்சியத்தைப்

படிப்படியாகப் புரிந்து கொள்வது.

செவிலியர்களுக்கான பயிற்சிப் பள்ளியை முதன்முதலில் துவக்கியவர் புளோரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nitingale) ஆவார்.போரில் உயிருக்காகப் போராடிய ராணுவ வீரர்களை இரவில் கையில் விளக்குடன் சென்று அவர்களுக்கு ஆதரவு கொடுத்து,அன்புடன் மருத்துவ சேவை புரிந்ததால் அவரை கைவிளக்கேந்திய சீமாட்டி ,கை விளக்கேந்திய காரிகை (The Lady With the Lamp) என்று மக்களால் இன்றுவரை அழைக்கப்படுகிறார்.இவர் வசதி படைத்த ஒரு குடும்பத்தில் 1820 ஆம் ஆண்டு மே 12 அன்று பிறந்தார்.இவர் ஜெர்மனி சென்றபோது கெய்சர்ஸ்வர்த் என்னும் மருத்துவமனையில் நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் கவனிப்பும்,மருத்துவ சேவையும் இவரை வெகுவாகக் கவர்ந்தது.அதனாலேயே செவிலியர் ஆனார்.பெற்றோர்கள் எதிர்ப்பையும் மீறி செவிலியர் ஆனார்.இத்துடன் எழுத்தாளராகவும்,புவியியல் அறிஞராகவும் விளங்கினார்.

ஏழைகள்மீது அக்கறை கொண்டவராக இருந்தார்.பிரிட்டிஷ் ஆதரவற்றோர் மருத்துவமனையில் மருத்துவ வசதிகளை மேம்படுத்தப் போராடினார்.1854-56 வரை கிரிமியனில் நடந்த போரின்போது போர்முனைக்குச் சென்று காயம்பட்டு உயிருக்காகப் போராடிய ராணுவ வீரர்களுக்கு இரவும்,பகலும் மருத்துவ சேவை புரிந்து பலரின் உயிரைக் காப்பாற்றினார்.அதனால் விக்டோரியா ராணியின் பெயருக்கு அடுத்த படியாக அறியப்பட்டவராக நைட்டிங்கேல் விளங்கினார்.இவர் நவீன செவிலியர் துறையின் முன்னோடியாக விளங்கினார்.இவர் 1910 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.1965 ஆம் ஆண்டுமுதல் இவர் பிறந்த மே 12 ஆம் தேதியை உலக செவிலியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சமூக அறிஞர்களின் வாசகங்கள் Copyright © 2015 by ஏற்காடு இளங்கோ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book