12

முதலாளித்துவ சமூகத்தில் சிந்தனைகளும்,செயல்பாடுகளும்,

பொருளாதார நலன் குறித்தே சுற்றி வருகின்றன.

பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் (Friedrich Engels) என்பவர் கார்ல் மார்க்ஸின் அருமையான நண்பர்.இவர் இல்லை என்றால் மார்க்ஸின் உழைப்பு உலகுக்கு முழுமையாகச் சென்று சேர்ந்திருக்காது. ஏங்கெல்ஸ் மிகப்பெரிய அறிஞர், தத்துவஞானி, எல்லாவற்றையும் கற்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர். தன் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகக்கட்டுப்பாடான ஒழுங்கு நிறைந்தவர்.ஏங்கெல்ஸ் 1820 ஆம் ஆண்டு நவம்பர் 28 அன்று புரூசியாவிலுள்ள பர்மன் என்னுமிடத்தில் பிறந்தார்.சிறுவனாக இருக்கும்பொழுதே மதங்களின்மீதும், முதலாளித்துவத்தின் மீதும் வெறுப்பு கொண்டிருந்தார். கார்ல் மார்க்ஸ் உடன் இணைந்து கம்யூனிஸ்ட் அறிக்கையை எழுதினார்.

தன்னை முன்னிலைப்படுத்தாமல் மார்க்ஸை முன்னிலைப்படுத்தினார்.கார்ல் மார்க்ஸ் மூலதனம் என்னும் நூலை வெளியிட உதவினார்.மார்க்ஸ் இறந்த பிறகு மூலதனத்தின் 2 ஆம்,3 ஆம் பாகங்கள் வெளிவர முழுபங்கு வகித்தவர் ஏங்கெல்ஸ்.பாட்டாளிகள் இழப்பதற்கு அவர்களின் அடிமைத்தனங்களைத் தவிர ஏதுமில்லை.ஆனால் பாட்டாளிகள் பெறுவதற்கோ ஓர் பொன்னுலகம் இருக்கிறது.ஆகவே உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என மார்க்ஸ் உடன் இணைந்து குரல் கொடுத்தார்.தன் சொத்தை மார்க்ஸின் குழந்தைக்கு எழுதி வைத்தார்.இவர் 1895 ஆம் ஆண்டு ஆகஸ்டு 5 இல் இயற்கை எய்தினார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சமூக அறிஞர்களின் வாசகங்கள் Copyright © 2015 by ஏற்காடு இளங்கோ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book