28

வேலை செய்ய கற்பதைப் போல

ஓய்வெடுக்க கற்பதும் முக்கியமானது.

இன்றைய உலகின் புகழ்மிக்க ,செல்வாக்கு மிக்க பெருந்தலைவர் பிடல் காஸ்ட்ரோ (Fidel Castro) ஆவார்.பொதுவுடமைப் புரட்சியாளர் மற்றும் பொதுவுடைமை அரசியல்வாதி பிடல் காஸ்ட்ரோ.கியூபா நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்தியதோடு,அந்த நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றவர்.அவரை கரும்பு தேசத்தின் இரும்பு மனிதர் என்றும் புகழ்கின்றனர்.இவர் 1926 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 அன்று பிரான் என்னும் ஊரில் பிறந்தார்.1945 இல் ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார்.இங்குதான் காஸ்ட்ரோ கம்யூனிஸ்ட்வாதியாக மாறினார்.போராட்டங்களின் மூலமும்,பேச்சுத் திறமையாலும் மக்களைக் கவர்ந்தார்.அமெரிக்காவின் கைப்பாவையான பாடிஸ்டா அரசின் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தி புரட்சிக்கு மக்களை திரட்டினார்.

கியூபாவின் விடுதலைப் போராட்டத்தில் சேகுவேராவும் இணைந்து கொண்டார்.விவசாயிகளையும் ,இளைஞர்களையும் புரட்சிக்கு தயார்படுத்தினார்.புரட்சி 1958 ஆம் ஆண்டில் வெற்றி பெற்றது.காஸ்ட்ரோ 1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும் 1976 முதல் 2008 வரை அதிபராகவும் பதவிவகித்தார்.கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் செயலராக 1965 இல் பதவி ஏற்றார்.கியூபா நாட்டின் ஆட்சிப் பதவியில் 49 ஆண்டுகள் இருந்த பிறகு தாமே முன்வந்து பதவியைத் துறந்தார்.அமெரிக்கா தனது சி.. அமைப்பின் மூலம் பிடல் காஸ்ட்ரோவை 638 முறை கொல்லத் திட்டம் தீட்டியும் அதன் முயற்சிகள் பலிக்கவில்லை.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சமூக அறிஞர்களின் வாசகங்கள் Copyright © 2015 by ஏற்காடு இளங்கோ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book