17

புரட்சி என்பது மனித குலத்தின் பிரிக்க முடியாத உரிமை.

சுதந்திரம் என்பது அனைவரின் அழிக்க முடியாத பிறப்புரிமை.

தொழிலாளர்களே சமுதாயத்தை உண்மையில் தாங்கிப்

பிடித்துக் கொண்டிருப்பவர்கள். மக்கள் அதிகாரமே

தொழிலாளர்களின் இறுதி இலக்கு.

பகத் சிங் (Bhagat Singh) இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லாயல்பூர் என்னும் ஊரில் 1907 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று பிறந்தார். இளம் வயதிலேயே நாட்டுப்பற்று மிக்கவராக இருந்தார்.1919 ஆம் ஆண்டில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த சில மணி நேரத்திற்குள்ளே அங்கு சென்று இரத்தம் படிந்த மண்ணை ஒரு பாட்டிலில் அடைத்து தன்னுடன் கடைசிவரை வைத்திருந்த விடுதலை வீரர்.இவரை மாவீரன் பகத் சிங் என்று அழைத்தனர்.இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஒரு புரட்சியாளராக விளங்கினார்.இந்தியாவில் மார்க்சிய கொள்கையும், சோசலிசக் கொள்கையும் பரவப் பாடுபட்டவர்களில் பகத் சிங்கும் ஒருவராவார்.

அகில இந்திய புரட்சியாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தார்.ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராக பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசி , மற்றும் துண்டு பிரசுரம் போட்டு இன்குலாப் ஜிந்தாபாத் என்று முழக்கமிட்டார்.காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் என்பவரின் இறப்பிற்குக் காரணமாக இருந்த காவல்துறை அதிகாரியைச் சுட்டுக் கொன்றார்.இதற்காக பகத் சிங், சுகதேவ், ராஜ்குரு ஆகிய மூன்று பேரும் 1931 ஆம் ஆண்டு மார்ச் 23 அன்று தூக்கிலிடப்பட்டனர்.தூக்கிலிடுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு புரட்சியாளர் லெனின் என்ற புத்தகத்தை பகத் சிங் படித்தார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சமூக அறிஞர்களின் வாசகங்கள் Copyright © 2015 by ஏற்காடு இளங்கோ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book