20

பிறந்த குழந்தைகூட அழுகை எனும் புரட்சி செய்துதான்

தன் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்கிறது.

fhjdfh இந்தியாவை அடிமையாக வைத்திருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ராணுவ ரீதியாக போராடிய மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆவார்.இவரை மக்கள் நேதாஜி(Netaji) என அன்பாக அழைத்தனர்.இவர் கட்டாக் என்னுமிடத்தில் 1897 ஆம் ஆண்டு ஜனவரி 23 அன்று பிறந்தார்.இந்தியக் குடிமைப் பணி தேர்ச்சி பெற்றவர்.தன் நாட்டை அடிமையாக வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் வேலை செய்யக்கூடாது எனக் கருதி தன் பதவியைத் துறந்தார்.பின்னர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்.ஆயுதம் தாங்கி வீர வழியில் போராட்டம் நடத்த வேண்டும் என்பதற்காக இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார்.பெண்களுக்கு என்று தனிப்படை பிரிவாக ஜான்சி ராணி படையையும் தொடங்கிப் போராடினார்.

நாட்டிற்கு என தனிக் கொடியை உருவாக்கினார்.அத்துடன் ஜன கன மன பாடலை தேசியகீதமாக அறிவித்தார்.இந்தியாவுக்கு நிபந்தனையற்ற விடுதலை வேண்டும் என்றார்.இரத்தத்தைத் தாருங்கள் உங்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தருகிறேன் என்பதே இவரின் சூளுரையாக இருந்தது.நேதாஜி விமான விபத்தில் இறந்துவிட்டதாகக் கருதப்பட்டாலும் இவரது இறப்பு மர்மமாக உள்ளது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சமூக அறிஞர்களின் வாசகங்கள் Copyright © 2015 by ஏற்காடு இளங்கோ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book