27

செயற்படுத்தி முடிக்கும்வரை சில விஷயங்கள் எப்போதும்

சாத்தியமற்ற தொன்றாகவே காட்சி தருவதுண்டு.

உலகிலேயே நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்த தலைவர் நெல்சன் மண்டேலா (Nelson Mandela) ஆவார்.இவர் 1918 ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று குலு கிராமத்தில் பிறந்தார்.இவர் சிறுவயதில் குத்துச்சண்டை வீரராக இருந்தார்.சட்டக்கல்வி பயின்றார்.தென்னாப்பிரிக்காவின் நிறவெறிக்கு எதிராகப் போராடிய தலைவர்களில் மிகவும் முக்கியமானவர்.ஆரம்பத்தில் அமைதி வழியில் போராடினார்.வெள்ளை நிறவெறி ஆட்சியின் அடக்குமுறை ,கைதுகள் ,சித்திரவதைகள் ஆகியவற்றைக் கண்டு, ஆயுதம் தாங்கிய கொரில்லாப் போர்முறையை கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து மேற்கொண்டார்.1961 ஆம் ஆண்டில் தேசத்தின் ஈட்டி என்ற பெயரில் கருப்பின மக்களின் கொரில்லாப் போர் தொடங்கியது.நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டு ,பின்னர் வாழ்நாள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது.இவர் ரோபன் தீவில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.உலகம் முழுவதும் நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டங்கள் நடைப்பெற்றன.நெல்சன் மண்டேலா 1990 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார்.1993 ஆம் ஆண்டின் இறுதியில் தென்னாப்பிரிக்காவில் நிறவெறி ஆட்சி முடிவுக்கு வந்தது.மண்டேலா தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் முதல் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.1999 க்குப் பின் அரசு பதவியிலிருந்து விலகினார்.அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.அத்துடன் 250 க்கும் மேற்பட்ட விருதுகளை உலகளவில் பெற்றுள்ளார்.இவர் 2013 இல் மறைந்தார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சமூக அறிஞர்களின் வாசகங்கள் Copyright © 2015 by ஏற்காடு இளங்கோ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book