15

The death of one man is a tragedy.

The death of millions is a statistic.

இருபதாம் நூற்றாண்டில் உலக வரலாற்றில் மாபெரும் முத்திரை பதித்தவர் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin) ஆவார்.லெனினியக் கோட்பாடுகளில் நின்று மனிதகுலத்திற்கு ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கி வைத்தார்.சோவியத் ரஷ்யாவை ஒரு புதிய பாதையில் கொண்டு சென்றவர்.இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்தும், அமெரிக்காவும் அஞ்சி நடுங்கிய பாசிச ஹிட்லரை வீழ்த்தி பாசிச கரங்களில் பிடிபட்டிருந்த மக்களை விடுவித்ததில் முக்கியப் பங்கு வகித்தவர்.இவர் ஒரு சாதாரண செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு மகனாக 1878 ஆம் ஆண்டு டிசம்பர் 18 அன்று பிறந்தார்.;லெனின் மறைவுக்குப் பின் 1922 முதல் 1953 வரை ரஷ்யாவின் அதிபராக இருந்தார்.இவருடைய திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கையால் ரஷ்யா மிகப்பெரிய தொழில் புரட்சியைக் கண்டது.

ஸ்டாலின் பெயரை உச்சரிக்கும் போதே ஒரு மிடுக்கும்,உற்சாகமும்,கம்பீரமும் கம்யூனிஸ்ட்களிடையே ஏற்படுவதைக் காணலாம்.கம்யூனிஸ்ட் எதிரிகள் ஸ்டாலின் பெயரைக் கேட்டால் அஞ்சி நடுங்கினர்.வரலாற்றின் மாபெரும் புரட்சியாளர்களில் ஸ்டாலின் தனிப் பெருமை பெற்று விளங்குகிறார்.ஸ்டாலின் தலைமையிலான ரஷ்யாவின் புரட்சிகர நடவடிக்கைகள் ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது.அவரின் நடவடிக்கை மனிதகுல முன்னேற்றத்துக்குப் புதிய திசையைக் காட்டியது. ஸ்டாலின் எளிமையாகவே வாழ்ந்தார்.இவர் 1953 ஆம் ஆண்டு மார்ச் 5 அன்று இயற்கை எய்தினார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சமூக அறிஞர்களின் வாசகங்கள் Copyright © 2015 by ஏற்காடு இளங்கோ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book