10

Women must not depend upon the protection of man,

                  but must be taught to protect herself.

எந்த உரிமையும் பெண்களுக்கு எளிதில் கிடைத்ததில்லை.ஆண்களுக்கு ஓட்டுரிமை இருப்பதுபோல் தங்களுக்கும் ஓட்டுரிமை வழங்க வேண்டும் எனப் போராடிய பெண்களில் முக்கியமானவர் சூசன் பி.அந்தோணி(Susan Brownell Anthony)ஆவார்.இவர் 1820 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 அன்று அமெரிக்காவில் ஆடம்ஸ் நகரில் பிறந்தார்.இவரது குடும்பம் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வந்தது.அடிமை முறை ஒழிப்பு இயக்கத்தில் தீவிரமாக ஈடுபாடு காட்டி வந்தார்.லிங்கன் நிர்வாகத்திற்கு ஆதரவாக பெண்கள் ஆதரவு சங்கத்தை சூசன் உருவாக்கி செயல்பட்டு வந்தார்.மது ஒழிப்புக் கூட்டத்தில் இவருக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டது.பெண்களுக்கு ஓட்டு அளிக்கும் உரிமை இல்லாததாலேயே அவரை பேச அனுமதிக்கவில்லை.

பெண்கள் உரிமைக்கான பேரவை என்ற அமைப்பை உருவாக்கிப் போராடினார். இதேபோல் தேசியப் பெண்கள் வாக்குரிமைச் சங்கத்தை 1864 இல் உருவாக்க காரணமாக இருந்தார்.பெண்கள் உரிமைகளை வலியிறுத்தி புரட்சி என்ற வார இதழை எலிசபெத் காடி ஸ்டாண்டன் என்பவருடன் இணைந்து நடத்தினார்.இவர் உலகம் முழுவதும் சென்று பெண்கள் வாக்குரிமை பிரச்சாரம் செய்தார்.1872 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் சட்டத்தை மீறி வாக்களித்தார்.இதனால் கைது செய்யப்பட்டார்.மேலும் பலத் தடைகளை மீறி ஒரே ஆண்டில் 20000 கிலோமீட்டர் பயணம் செய்து 170 இடங்களில் சொற்பொழிவு ஆற்றினார். இவர் 1906 இல் காலமானார்.இவர் இறந்து 14 ஆண்டுகள் கழித்து பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைத்தது.

13

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சமூக அறிஞர்களின் வாசகங்கள் Copyright © 2015 by ஏற்காடு இளங்கோ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book