19

ஆணின் துணையாக விளங்கும் பெண், ஆணைப் போன்றே

எல்லா வித திறமைகளையும் கொண்டுள்ளார்.

மனிதனின் ஒவ்வொரு சின்னஞ்சிறு விசயங்களிலும் பங்கேற்க

அவளுக்கு உரிமை உண்டு.அவனுடன் இணைந்து சுதந்திரம்

மற்றும் விடுதலையில் சம உரிமை அவளுக்கும் உண்டு.

விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை என மகாத்மா காந்தி அன்புடன் அழைக்கப்படுகிறார்.மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்பது இவருடைய பெயர்.இவர் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் என்னும் ஊரில் 1869 ஆம் ஆண்டு அக்டோபர் 2 அன்று பிறந்தார்.இவர் பாரிஸ்டர் எனப்படும் வழக்கறிஞர் பட்டத்தை இங்கிலாந்து நாட்டில் பெற்றார்.சிறிது காலம் இந்தியாவில் வழக்கறிஞராகப் பணிபுரிந்த பின்பு தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தார்.தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட அவலங்கள் காந்தியை ஒரு அரசியல் சக்தியாக உருவாக்கியது.தென்னாப்பிரிக்காவில் 1894 இல் நாட்டல் இந்திய காங்கிரஸ் என்ற பெயரில் கட்சியைத் தொடங்கி வழி நடத்தினார்.பின்னர் இந்தியா திரும்பிய காந்தி ,இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

உப்பு சத்தியாக்கிரகம் என்று அழைக்கப்பட்ட போராட்டம் இந்திய விடுதலைப் போராட்ட சரித்திரத்தில் ஒரு புதிய திருப்புமுனையாக மாறியது.அதன்பிறகு வெள்ளையனே வெளியேறு போராட்டத்திலும் காந்தி பங்கு வகித்தார்.இந்தியாவில் நடந்த பல்வேறு போராட்டத்தின் விளைவாக நாடு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம் அடைந்தது.1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 அன்று நாதுராம் கோட்ஸே என்பவனால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்.இந்நாளை இந்தியாவில் தியாகிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சமூக அறிஞர்களின் வாசகங்கள் Copyright © 2015 by ஏற்காடு இளங்கோ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book