8

Male and Females citizens,

being equal in the eyes of the law.

பிரெஞ்சு புரட்சி நடைபெற்றக் காலக்கட்டத்தில் பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்தவர்.துணிச்சலான கருத்துக்களை வெளியிட்டார்.புரட்சி ஏற்பட்டக் காலத்தில் துணிச்சலாகவும், தைரியமாகவும்,புரட்சிகரமாகவும் எழுதிய பெண் எழுத்தாளர் ஒலிம்பி டி காக்ஸ்(Olympe de Gouges) ஆவார். இவர் ஒரு பிரெஞ்சு எழுத்தாளர், நாடகாசிரியர், அரசியல்வாதி மற்றும் பெண்ணியவாதிகளுக்கு ஊக்கமும் ,ஆக்கமும் தந்தவர். இவர் 1745 ஆம் ஆண்டு மே 7 அன்று பிரெஞ்சு நாட்டில் மாண்டாபன் என்னும் ஊரில் பிறந்தார். வசதி படைத்த இவரைவிட வயதில் மூத்த லூயிஸ் ஆப்பிரி என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.அவர் இறந்ததால் இளம் வயதிலேயே விதவையானார்.

பிரெஞ்சுப் புரட்சியானது 1789 முதல் 1799 ஆம் ஆண்டுவரை நடந்தது.இவருக்கு புரட்சியாளர்களுடன் தொடர்பு கிடைத்தது.புரட்சியின் பலனாக ஆண்களுக்கான உரிமைகள் கிடைத்தன.பெண்களுக்கும் ஆண்களை போல் சம உரிமைகள் வழங்க வேண்டும்,பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்க வேண்டும் என காக்ஸ் பெண்களைத் திரட்டிப் போராடினார்.இவர் ஆண்,பெண் பாலின பாகுபாடுகளைப் பற்றி எழுதினார்.இவர் தீவிரமாக,புரட்சிகரமாக எழுதிய காரணத்திற்காகக் கைது செய்யப்பட்டார்.1793 ஆம் ஆண்டு நவம்பர் 2 அன்று இவரின் தலை துண்டிக்கப்பட்டது.இன்றைக்கும் பெண்ணியவாதிகளில் முன்னோடியாக கருதப்படுகிறார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சமூக அறிஞர்களின் வாசகங்கள் Copyright © 2015 by ஏற்காடு இளங்கோ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book