37

I love life,I Do not want to take my life,

but I want justice and peace.

மணிப்பூர் மாநிலத்தின் இரும்பு மங்கை என அழைக்கப்படுபவர் ஐரோம் சானு சர்மிளா (Irom Chanu Sharmila )ஆவார்.அப்பகுதி மக்கள் அவரை மெங்நெநுளபி என அழைக்கின்றனர்.இவர் 1972 ஆம் ஆண்டு மார்ச் 14 அன்று மணிப்பூர் மாநிலத்தில் கொங்பால் என்னும் ஊரில் பிறந்தார்.மணிப்பூர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 1958 ஆம் ஆண்டு முதல் ஆயுதப்படை சிறப்பு அதிபராகச் சட்டம் அமுலில் உள்ளது.சட்ட ஒழுங்கைப் பராமரிக்கும் பொறுப்பு ராணுவத்திடம் உள்ளது.சட்டத்தை மீறுபவர்களாகக் கருதும் நபர்கள்மீது ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தலாம்.நீதிமன்ற ஆணை இல்லாமலே யாரையும் கைது செய்யலாம்.ராணுவத்துக்கு அளவில்லா அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. சந்தேகப்படும் யாரையும் சுட்டுக் கொல்லவும் ராணுவத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மலோம் என்ற இடத்தில் பேருந்தில் சென்ற 10 பயணிகளை 2000 ஆம் ஆண்டு நவம்பர் 2 அன்று ராணுவம் சுட்டுக் கொன்றது.இதனை மலோம் படுகொலை என அப்பகுதி மக்கள் வர்ணிக்கின்றனர் .இதனால் கோபம் கொண்ட ஐரோம் சர்மிளா ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.உணவு மற்றும் நீர் ஆகியவற்றை அருந்தாமல் உண்ணாவிரதம் தொடங்கினார்.அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.கட்டாயப்படுத்தி மூக்கின் வழியாக திரவ உணவை செலுத்தினர்.ஓர் ஆண்டிற்கு மேல் சிறையில் வைத்திருக்கக் கூடாது என்கிற சட்டத்தின்படி ஒரு நாள் விடுதலை செய்யப்பட்டு மறுநாள் முதல் வீட்டுக்காவலில் வைக்கப்படுகிறார். 15 ஆண்டாக உண்ணாவிரதம் தொடர்கிறது. உலகில் இதுவே நீண்ட உண்ணாவிரதப் போராட்டமாகும்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சமூக அறிஞர்களின் வாசகங்கள் Copyright © 2015 by ஏற்காடு இளங்கோ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book