38

மக்களைக் கெடுப்பது அதிகாரம் அல்ல,அச்சம்தான்.

அதிகாரத்தை வைத்திருப்போர்கள் அதை இழந்து

விடுவோமோ என்ற அச்சம் கெடுக்கிறது.

உலகம் முழுவதும் ஜனநாயக உரிமைக்காகவும்,மக்களாட்சிக்காகவும், மனித உரிமைக்காகவும் போராடிக்கொண்டிருப்போர்க்கு உத்வேகத்தை தந்து கொண்டிருப்பவர் ஆங் சாங் சூ கி ( Aung San Suu Kyi ) ஆவார். இவர் 1945 ஆம் ஆண்டு ஜூன் 19 அன்று பர்மாவில் பிறந்தார்.இவரின் தந்தை பிரிட்டிஷ் அரசின் கீழ் பிரதம அமைச்சராக இருந்தார். 1947 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார்.சூகி தனது படிப்பை இந்தியாவிலும், அமெரிக்காவிலும் முடித்தார்..நா.செயலகத்தில் உதவிச் செயலாளராகப் பணிபுரிந்தார்.அப்போது மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு தொண்டராக இருந்து சேவை புரிந்தார்.இவருடைய தாயார் இறந்தபோது மியான்மார் திரும்பினார்.

பர்மாவில் ராணுவ ஆட்சி நடந்துகொண்டிருந்தது.வேலையில்லாத் திண்டாட்டம், ஊழல்,பொருளாதார நெருக்கடியில் பர்மா சிக்கித் தவித்தது.சூ கி 1988 ஆம் ஆண்டு அரசியலில் ஈடுபட்டார்.ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடினார்.இதற்காக அவர் சிறையிலும்,வீட்டுக் காவலிலும் வைக்கப்பட்டார்.1991 ஆம் ஆண்டு அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கியபோதும் அவர் சிறையிலேயே இருந்தார்.மியான்மரில் நடந்த தேர்தலில் அதிக இடங்களைப் பிடித்த போதும் ராணுவ ஆட்சி அவரை ஆட்சியில் ஏற அனுமதிக்கவில்லை.அவர் தனது 21 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 15 ஆண்டுகள் சிறையில் இருந்தார்.2010 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார்.மக்களாட்சிக்காக தொடர்ந்து போராடி வருகிறார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சமூக அறிஞர்களின் வாசகங்கள் Copyright © 2015 by ஏற்காடு இளங்கோ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book