34

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்,

ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி,இந்திய ஏவுகணை நாயகன் என அப்துல் கலாம் (Abdul Kalam) அவர்களை அழைக்கின்றனர்.இவர் தொழில் நுட்ப வல்லுநர்,சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கத்தக்க அற்புதமான பேச்சாளர்.மாணவர்களை சந்தித்து அவர்களுடன் அறிவியல் உரையாடுவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.அவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் பிறந்தார்.தனது விண்வெளி பொறியியல் படிப்பை சென்னையில் உள்ள எம்..டி.யில் முடித்தார்.1960 ஆம் ஆண்டில் ஒரு விஞ்ஞானியாக தனது ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கினார்.இந்திய ராணுவத்திற்கு ஒரு சிறிய ஹெலிகாப்டரை வடிவமைத்துக் கொடுத்தார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் தனது ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார்.1980 ஆம் ஆண்டில் SLV III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-1 என்ற செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதன் மூலம் பிரபலம் அடைந்தார்.இவர் இந்தியாவின் 11 ஆவது குடியரசுத் தலைவராக 2002 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவரை மக்களின் ஜனாதிபதி என்று அழைக்கும் அளவிற்கு மக்களிடம் நெருக்கமாகப் பழகினார்.இவர் இந்தியாவின் உயரிய விருதுகளான பத்ம விபூசன்,பாரத ரத்னா விருதுகளைப் பெற்றுள்ளார்.கனவு காணுங்கள்,அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள் என இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சமூக அறிஞர்களின் வாசகங்கள் Copyright © 2015 by ஏற்காடு இளங்கோ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book