13

இன்று நீங்கள் நெரிக்கின்ற எங்களது குரலைவிட,எமது

மவுனம் ஆற்றல் மிக்க சக்தியாக வெளிப்படும் காலம் வரும்.

எட்டு மணி நேரம் கேட்டுப் போராடி தொழிலாளர் வர்க்கத்திற்காக தனது உயிரைத் தியாகம் செய்தவர் அகஸ்டஸ் ஸ்பைஸ் (Augustus Vincent Theodore Spies) ஆவார்.இவர் தீவிர தொழிலாளர் ஆதரவாளர்,தொழிற்சங்கத் தலைவர் மற்றும் பத்திரிகை ஆசிரியர்.இவர் மத்திய ஜெர்மனியில் உள்ள ஹெஸ்ஸா மாநிலத்தில் 1855 ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று பிறந்தார்.இவரது தந்தை அரசின் வனத்துறை அதிகாரியாகப் பணிபுரிந்தார்.அவர் இறந்தபிறகு இவர் அமெரிக்காவின் சிகாகோ நகரில் குடியேறினார்.தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டார்.1877 ஆம் ஆண்டில் சோசலிச தொழிலாளர் கட்சியில் சேர்ந்தார்.சர்வதேச தொழிலாளர் சங்கத்தில் இணைந்து தொழிலாளர்களுக்காக போராடினார்.

எட்டு மணி வேலை நேரம் கேட்டு தொழிலாளர்களின் போராட்டங்கள் பேரணிகள் நடந்தன.தொழிலாளர்கள் ஒன்று சேராமல் தங்களால் வெற்றி பெற முடியாது என பொதுக் கூட்டங்களில் பேசினார். 8 மணி வேலை நேரம், பேச்சுச்சுதந்திரம், தொழிலாளர் அமைப்பாக திரட்டுவதற்கான சுதந்திரம் வேண்டி ஹேமார்க்கெட் சதுக்கத்தில் 1886 ஆம் ஆண்டு மே 4 இல் தொழிலாளர்கள் போராட்டம் நடைபெற்றது.அப்போது அடையாளம் தெரியாத ஒருவரால் வீசப்பட்ட குண்டு வெடித்து 7 போலிஸ்,4 பொதுமக்கள் இறந்தனர். இதனை ஹேமார்க்கெட் படுகொலை என்றனர். இக்கொலைக்கு சதி திட்டம் தீட்டினார் என அகஸ்டஸ் ஸ்பைஸ் கைது செய்யப்பட்டார். பின்னர் 1887 ஆம் ஆண்டு நவம்பர் 11 இல் தூக்கிலிடப்பட்டார். இது உலகத்தொழிலாளர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சமூக அறிஞர்களின் வாசகங்கள் Copyright © 2015 by ஏற்காடு இளங்கோ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book